டிஜிட்டல் பணப்பை
எண்ணிமப் பணப்பை அல்லது டிஜிட்டல் பணப்பை (digital wallet) என்பது ஒரு மென்பொருள். தற்பொழுது இம்மென்பொருள் உலகளாவிய பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உலகில் பலராலும் மிகுதியாக பயன்படுத்தப்படும் மென்பொருளாக திகழ்கிறது. உங்களுடைய கடன் அட்டை, பற்று அட்டை, முகவரிகள், உரிமங்கள் என எல்லாவற்றையும் இதில் சேமித்து வைக்க வேண்டும். அது இரகசியக் குறியீடுகளாக திறன்பேசியில் அமர்ந்து கொள்ளும். அதற்கென தனிப்பட்ட கடவுச் சொற்களை வைத்துக் கொள்ளலாம்.[1][2][3]
கூகுள் நிறுவனம் டிஜிட்டல் பணப்பை மென்பொருளை முதன் முதலில் 2012 ஆண்டு அளவில் சந்தைப்படுத்தியது. ஒரு பொருளை கடை ஒன்றில் வாங்கும் போது, திறன்பேசியை கடையிலுள்ள கருவியில் தட்டினால் போதும். உங்கள் கடனட்டை மூலம் பணம் செலுத்தப்பட்டு விடும். இதற்கு 'அண்மைத் தகவல் தொடர்பு' (Near field communication) எனப்படும் அருகாமைத் தொடர்பு தொழில்நுட்பம் அவசியம். ஆண்ட்ராய்டு இயங்குதளம், துவங்கி வைத்த இந்த பயணம் இன்று பல வடிவங்களில், பல இயங்கு தளங்களில் வளர்ந்து ஆப்பிள் ஐஓஎஸ்-இல் 'பாஸ்புக்' (Passbook) என்னும் பெயரில் நுழைந்திருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clark, Sarah (11 October 2012). "NTT Docomo to take Japanese mobile wallet global". NFC World. Archived from the original on 20 November 2017. பார்க்கப்பட்ட நாள் March 23, 2013.
- ↑ Barrett, Randy (February 8, 2023). "Digital Driver's Licenses Are Finding Their Way to State and Federal Agencies". FedTech. Archived from the original on November 1, 2023. பார்க்கப்பட்ட நாள் November 1, 2023.
- ↑ Kang, Baoyuan; Shao, Dongyang; Wang, Jiaqiang (2018). "A fair electronic payment system for digital content using elliptic curve cryptography". Journal of Algorithms & Computational Technology 12 (1): 13–19. doi:10.1177/1748301817727123. பன்னாட்டுத் தர தொடர் எண்:1748-3018.